முல்லைஅமுதன் எனும் பேயரில் 80களில் இருந்து எழுதி வரும் மகேந்திரன் இரத்தினசபாபதி அவர்கள் திருகோணமலை பெருந்தெரு தமிழ்க் கலவன் பாடசாலை, யாழ்/செங்குந்தா இந்துக் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆகியவற்றில் தன் கல்வியைத் தொடர்ந்தார். நித்தியகல்யாணி, புதிய அடிமைகள், விடியத் துடிக்கும் ராத்திரிகள், விழுதுகள் மண்ணைத் தொடும், ஆத்மா, யுத்த காண்டம், விமோசனம் நாளை, பட்டங்கள் சுமக்கின்றான், சிநேகம், யாகம், இசைக்குள் அடங்காத பாடல்கள், இலக்கியப்பூக்கள் போன்ற நூல்களுடன், தாமரைதீவானின் மொழிநூறு,சுதந்திரன் கவிதைகள் நூல்களையும் வெளியிட்டுள்ளார். வருடந்தம் ஈழத்து நூல் கண்காட்சிகளை நடாத்துவதுடன், ஈழத்து நூல்களை ஆவணப்படுத்தியும் வருவதுடன், காற்றுவெளி இலக்கிய சஞ்சிகயையும் நடாத்தி வருகிறார். இவருக்கு இங்கிலாந்து ரூட்டிங் முத்துமாரியம்மன் கோவில் அறங்காவர் குழுவினரால் முதமிழ் விழாவில் (14/04/2012) 'பைந்தமிழ்க் காவலர்' எனும் பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment